கிளி வளர்த்தேன்
பறந்து விட்டது.
அணில் வளர்த்தேன்
ஓடிவிட்டது.
மரம் வளர்த்தேன்
இரண்டும் திரும்பி வந்துவிட்டது.
...........
அக்கினிச் சிறகுகள் அணைவதில்லை அவை
இறவாது வாழும் அவற்றிலிருந்து
விழுந்த இறகுகள்
மேலெழுந்து பறந்து கொண்டிருக்கும் வரை....
......!..
அழகைப் பற்றி கனவு
காணாதீர்கள், அது உங்கள்
கடமையைப் பாழாக்கிவிடும்.
கடமையைப் பற்றி கனவு
காணுங்கள் அது உங்கள்
வாழ்க்கையை அழகாக்கும்.
................
கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில்
காண்பது அல்ல
உன்னைத்
தூங்க விடாமல்
பண்ணுவது எதுவோ
அதுவே (இலட்சிய) கனவு.
........
பிறந்தநாள்
உன் வாழ்நாளில்
நீ அழுது
உன் அன்னை சிரித்த
ஒரே நாள்.....
..........
நாம்
கனவு காண வேண்டியது
மகத்தான இந்தியாவை அல்ல.
மாறாக
எழுத்தறிவு பெற்ற
இந்தியாவைத்தான்.
..........
ஒரு முறை வந்தால்
அது கனவு
இருமுறை வந்தால்
அது ஆசை
பலமுறை வந்தால்
அது லட்சியம்.
........
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னைக் கொன்றுவிடும்
கண்ணைத் திறந்து பார்.
நீ அதை வென்று விடலாம்.
...........
நம் அனைவருக்கும்
ஒரே மாதிரி திறமை
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
அனைவருக்கும்
திறமையை
வளர்த்துக்கொள்ள ஒரே
மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
.........
தோல்வி மனப்பான்மையை
தோல்வி அடையச் செய்வோம்!
கனவு காணுங்கள்
கனவு என்பது தூங்கும்போது
வருவதல்ல!
நம்மை தூங்க விடாமல் செய்வதே
கனவு!
..........
ஒரு நல்லப் புத்தகம்
நூறு நல்ல
நண்பர்களுக்கு சமம்.
ஆனால், ஒரு நல்ல
நண்பன் ஒரு
நூலகத்திற்கே சமம்.
.........
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை
தேவை இல்லை. துன்பங்களை சந்திக்கத்
தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை...
...........
உன் கை ரேகையைப் பார்த்து எதிர் காலத்தை
நிர்ணயித்து விடாதே.... ஏனென்றால் கையே
இல்லாதவனுக்கும் கூட எதிர்காலம் உண்டு.
.............
கனவு காணுங்கள். அவற்றை
நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
என்னால் முடியும்....
நம்மால் முடியும்....
இந்தியாவில் முடியும் என்ற
மந்திரத்தை சொல்லிக்
கொண்டே இருங்கள்.
...............
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின்
பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது . ஆனால்
அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது
உங்கள் கைகளில் தான் உள்ளது.
...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை இழுத்து
இழுத்து நடக்காதே!
..........

கருத்துகள்
கருத்துரையிடுக